பவுண்ட் மற்றும் யூரோவிற்கு நிகரான டொலரின் பெறுமதி பாரிய வீழ்ச்சி!
பிரித்தானியா பவுண்ட் மற்றும் யூரோவிற்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான பவுண்ட் பெறுமதி 1.2941 காணப்படுவதாகவும், யூரோவின் பெறுமதி 1.109ஆக காணப்படுவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் மிகப் பெரிய பங்கு பரிவர்தனை குறியீடுகளாக Dow Jones, the S&P 500 மற்றும் Nasdaq ஆகியன இன்று வீழ்ச்சியை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் அச்சமூட்டும் நடவடிக்கையின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரித்தானியாவின் பொருளாதாரம் ஒரு வலுவான நிலையில் இருப்பதாகவும், தொழிலாளர் சந்தையில் ஒரு மேம்படுத்தல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த மூன்று மாதங்களில் பிரித்தானியாவில் வேலையின்மை வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் Office for National Statistics (ONS) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது 4.7 வீதமாக காணப்பட்ட வேலையின்னை பிரச்சினை 4.6 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊழியர்களுக்கு சராசரியாக வாராந்த வருமானம் கொடுப்பனவுகள் உள்ளிட்ட 2.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது, இது கடந்த ஓராண்டுக்கு முன்னருடன் ஒப்பிடுகையில், கொடுப்பனவு தவிர்த்து 2.1 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவிற்கு நிகரான டொலரின் பெறுமதி பாரிய வீழ்ச்சி!
Reviewed by NEWMANNAR
on
May 17, 2017
Rating:

No comments:
Post a Comment