நல்லாட்சி அரசில் தகுதியின் அடிப்படையிலேயே தொழில்வாய்ப்புகள் வழங்கப்படும்: கே.கே.மஸ்தான் எம்.பி
அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் எனக் கூறி வறுமைப்பட்டவர்களிடம் ஆசை வார்த்தைகளை தெரிவித்து பணம் சூறையாடும் செயற்பாடுகள் நெடுங்கேணி போன்ற பிரதேசங்களில் பரவலாக இடம்பெற்று வருகின்றன.
அதனால் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வடமாகாண கல்வி அமைச்சின் அனுசரணையில் வவுனியா வடக்கு கல்வி வலயம் ஏற்பாடு செய்திருந்த முழுநிலா கலை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மக்கள் பிரதிநிதிகளுடன் நெருக்கமாக நின்று புகைப்படங்களை எடுத்துக்கொள்ளும் சிலர் பின்னர் தம்மை பிரபல அரசியல் கட்சிகளின் பிரமுகர் எனக் கூறுவதுடன், தம்மிடம் தொன்னூறாயிரம் ரூபாவை தரும் பட்சத்தில் சில காலங்களில் முப்பது இலட்சமாக தர முடியும் என கூறுகின்றனர்.
அத்துடன் விவசாய கடன்கள் தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தருவதாகவும் கூறி, வறுமைப்பட்ட மக்களிடம் பணத்தினை பெறுகின்றனர்.
இவர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும். வறுமையை பயன்படுத்தி சிலர் இலாபம் தேட முயற்சி செய்கின்றனர்.
இவர்கள் தொடர்பாக பொலிஸிலோ அல்லது மக்கள் பிரதிநிதிகளிடமோ உடன் அறிவியுங்கள். ஏனெனில் நல்லாட்சி அரசில் தகுதியின் அடிப்படையிலேயே தொழில்வாய்ப்புகள் வழங்கப்படும்.
ஒரு சதமேனும் பணம் வாங்கி தொழில் வழங்கும் செயற்பாடுகள் இந்த அரசியல் இடம்பெறாது எனவே மக்கள் இதனை விளங்கி ஏமாறாமல் இருக்கவேண்டும் என அவர் தொடர்ந்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லாட்சி அரசில் தகுதியின் அடிப்படையிலேயே தொழில்வாய்ப்புகள் வழங்கப்படும்: கே.கே.மஸ்தான் எம்.பி
Reviewed by Author
on
May 11, 2017
Rating:

No comments:
Post a Comment