ஒரு போதும் நடுநிலை தவறவில்லை! சீ.வியின் குற்றச்சாட்டுக்கு சீ.வி.கே பதில்....
அவைத்தலைவர் என்ற ரீதியில் நான் ஒருபோதும் கடமையிலிருந்து நடுநிலை தவறவில்லை என வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நான் நடுநிலை தவறியதாக யாரும் கூறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சருக்கு எதிராக தாமாகவே முன்வந்து நம்பிக்கையில்லா பிரேரணையை ஆளுநரிடம் கையளித்தமை சட்டத்திற்கு முரணானது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியிருந்தார்.
இது குறித்து தனது நிலைப்பாட்டை கேட்ட போது வடமாகாண அவைத்தலைவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
"முதலமைச்சருக்க எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை மாகாண சபையில் விவாதிக்கப்படமுடியாது. அதற்கான சட்டம் கிடையாது.
முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையீனமான நிலை ஏற்பட்டால் அதன் முறைப்பாடு ஆளுநரிடமே கையளிக்கப்பட வேண்டும். அது தொடர்பில் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பார்.
குறிப்பாக முதலமைச்சரை மாகாண சபையில் தமது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கூறுவார். அப்படி கோரும்போது முதலமைச்சர் ஒருவரின் நம்பிக்கைப் பிரேரணையை சபையில் தாக்கல் செய்வார்.
இதன் போது அந்தப் பிரேரணை விவாதித்து வாக்கெடுப்புக்கு விடப்படும். சபையிலே நம்பிக்கையில்லாப் பிரரேரணை என்பது இல்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு மட்டுமே உண்டு.
எனவே நம்பிக்கையில்லாப் பிரேரணையை அவைத்தலைவருக்குச் சமர்ப்பிப்பது என்பது நடைமுறை இல்லை. ஆளுநரின் பணிப்பின் பேரில் முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதே நடைமுறை.
இதேவேளை, அவைத் தலைவர் என்ற கடமையில் இருந்து நான் நடுநிலை தவறவில்லை. நடுநிலை தவறியதாக யாரும் சொல்லவில்லை. நான் அப்படி நடக்கவும் இல்லை.
இந்நிலையில், நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றுவது கட்சித் தீர்மானம். கட்சியின் உறுப்பினர் என்ற வகையில் அந்த நடவடிக்கை கட்சியின் கட்டுப்பாட்டுக்கமைய செய்யப்பட்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒரு போதும் நடுநிலை தவறவில்லை! சீ.வியின் குற்றச்சாட்டுக்கு சீ.வி.கே பதில்....
Reviewed by Author
on
June 21, 2017
Rating:

No comments:
Post a Comment