தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் - அரசு இரண்டும் ஒன்றே கஜேந்திரகுமார் சாடல்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அரசாங்கத்தையும் பிரித்துப் பார்ப்பது தவறு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று அரசாங்கத்தின் ஒரு அங்கம். அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றுதான். அது தான் யாதார்த்தம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எட்டு வருடங்களாக இந்தப் பிரச்சினையை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். கடந்த மார்ச் மாதமும் ஐ.நாவால் அரசுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழ ங்கியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுமதியோடுதான், உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் கூட்டமைப்பு அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தால் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டிருக்க வாய்ப்பிருந்திருக்காது.
எனவே இன்றைக்கு (நேற்று) கூட்டமைப்பில் இருக்கின்ற ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டாலும் கூட அவர்கள் தொடர்ந்தும் அந்த தலைமையை ஏற்றுக்கொண்டிருக்கும் வரைக்கும் அந்த தலைமை தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு துணைபோய்க்கொண்டிருக்கும் நிலைமை இருக்கும் வரைக்கும் அந்த தலைமை செய்யும் பச்சைத் துரோகத்தை இந்த தனிநபர்கள் இங்கு வந்து கலந்து கொண்டு துரோகத்தை மூடி மறைப்பதாகத்தான் இரு க்குமே தவிர வேறு எதுவும் கிடையாது.
ஆகவே பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது இருப்பதன் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்ற அதேவேளை அதற்கு சமமாக கூட்டமைப்பும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை மக்களே முன்வைக்கின்ற நிலைமை வெகு தூரத்தில் இல்லை. இன்றைய போராட்டமும் அதன் வெளிப்பாடாகதான் இருக்கிறது என கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் - அரசு இரண்டும் ஒன்றே கஜேந்திரகுமார் சாடல்...
Reviewed by Author
on
June 01, 2017
Rating:

No comments:
Post a Comment