வவுனியாவிலுள்ள வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் உதவித் தொகை வழங்கும் நிகழ்வு இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு வன்னி மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்க இணைப்பாளரும், வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கத் தலைவருமான ம. ஆனந்தராஜாவினால் பட்டதாரிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது வவுனியாவிலுள்ள கலைஞர்கள் குறிப்பாக வளர்ந்து வரும் கலைஞர்கள் முகம் கொடுக்கும் சவால்கள் தொடர்பாக வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்க இணைப்பாளரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருந்தது.
இன்று முதற்கட்ட கொடுப்பனவாக ஒரு தொகை பண உதவிகள் கலைஞர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வவுனியாவிலுள்ள வளர்ந்து வரும் கலைஞர்கள், இயக்குனர்கள், குறும்பட தாயாரிப்பாளர்கள், நடிகர்கள், கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன், இதன் போது இடம் பெற்ற கலந்துரையாடலில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் முன்வைத்துள்ளனர்.
மேலும், வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் மேலதிக தேவைகளை இனிவரும் காலங்களில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கலைஞர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து செயற்படுமாறும் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கலைஞர்களுக்கு உதவிக் கொடுப்பனவுகள் வழங்கி வைப்பு.....
Reviewed by Author
on
June 03, 2017
Rating:

No comments:
Post a Comment