அண்மைய செய்திகள்

recent
-

அவசரநிலை பிரகடனம்....கனடாவில் 180 இடங்களில் பயங்கர காட்டுத்தீ


கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுவதுடன் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ பரவியுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சுமார் 183 இடங்களில் பரவியுள்ளது. மட்டுமின்றி வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டுமே 173 இடங்களில் காட்டுத்தீ பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

காற்று பலமாக வீசுவதால் தீ காட்டுப்பகுதியையொட்டி உள்ள 20–க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த 7 ஆயிரம் பேர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.



தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைக்கும் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகொப்டர்கள் மூலமும் தண்ணீர் தெளிக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்று அந்நாட்டின் வானிலை இலாகா அறிவித்துள்ளது. இது அப்பகுதி மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தி இருக்கிறது.

காட்டுத்தீ பரவியதையொட்டி பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.

அவசரநிலை பிரகடனம்....கனடாவில் 180 இடங்களில் பயங்கர காட்டுத்தீ Reviewed by Author on July 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.