கிளிநொச்சியில் மீள்குடியேறியுள்ள 2703 குடும்பங்களுக்கு வீடுகள் தேவை...
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேறியுள்ள சுமார் 2703 குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டிய தேவை காணப்படுவதாக கண்டாவளைப் பிரதேச செயலர் ரீ.முகுந்தன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள 16 கிராம அலுவலர் பிரிவுகளிலும் எண்ணாயிரத்து 314 குடும்பங்களைச் சேர்ந்த இருபத்தி ஐயாயிரத்து 969 பேர் வரையில் இதுவரை மீள்குடியேறியுள்ளனர்.
கண்டாவளைப் பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள எண்ணாயிரத்து 314 குடும்பங்களில் இதுவரை 5278 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இரண்டாயிரத்து 703 புதிய வீடுகளையும் பகுதியளவில் சேதமடைந்த 333 வீடுகளை புனரமைத்தும் கொடுக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும் கண்டாவளைப் பிரதேச செயலர் ரீ.முகுந்தன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் மீள்குடியேறியுள்ள 2703 குடும்பங்களுக்கு வீடுகள் தேவை...
Reviewed by Author
on
July 19, 2017
Rating:

No comments:
Post a Comment