வடக்கில் வறட்சியால் 74,000 குடும்பங்கள் பாதிப்பு....
வட மாகாணத்தில் கடுமையான வறட்சி நிலவுவதன் காரணமாக 74,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாகாணத்தின் மாவட்டச் செயலாளர்களினால் வழங்கப்பட்டுள்ள புள்ளி விபர அறிக்கைகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வறட்சி காரணமாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் மட்டும் 23,000 குடும்பங்கள் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு போதியளவு குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பவுசர் மூலம் அவர்களுக்கு குடிநீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
வடக்கில் வறட்சியால் 74,000 குடும்பங்கள் பாதிப்பு....
Reviewed by Author
on
July 25, 2017
Rating:

No comments:
Post a Comment