தலைமன்னார் பிரதான வீதியில் டிப்பர் மோதி மாணவி உயிரிழப்பு…Photos
புதுக்குடியிருப்பில் வசிக்கும் றிப்ரி அவர்களின் மகளான பாத்திமா றிஸ்னா பானு தரம் 05ந்தில் புதுக்குடியிருப்பு அ.த.மு.பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியே இவ்விபத்தில் உயிரிழந்தவராவார்.
மேலும் சம்பவம் தொடர்பாக மாணவி மீது மோதிய டிப்பர் சாரதி நிற்காமல் வேகமாக தப்பியோட முற்பட்டபோது கிராம இளைஞர்களால் மடக்கிப்பிடித்து நையப்புடைத்து டிப்பரையும் சேதப்படுத்தியபோது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் டிப்பர் சாரதியையும் அவரது உதவியாளரையும் கைதுசெய்ததுடன் அவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் அவர்களை சிகிச்சைக்காக மன்னார் பொதுவைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
அத்தோடு விபத்து நடந்த பகுதியினை பார்வையிட்ட பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டனர் சம்பவ இடத்திற்கு வந்த நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ் ராஜா மரணவிசாரணை மேற்கொண்டார். குறித்த மாணவியின் உடலம் பிரேதபரிசோதணைக்காக மன்னார். பொதுவைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
வேகத்தினைக்குறைப்போம் விவேகமாக வாகனங்களை செலுத்துவோம்.
உயிரின் பெறுமதி உணருங்கள்…. அக்குடும்பத்தின் நிலையை எண்ணிப்பாருங்கள்….

தலைமன்னார் பிரதான வீதியில் டிப்பர் மோதி மாணவி உயிரிழப்பு…Photos
Reviewed by Author
on
July 18, 2017
Rating:

No comments:
Post a Comment