தமிழீழம் மலர வேண்டும்! கடிதம் எழுதி வைத்துவிட்டு தமிழீழ ஆதரவாளர் தற்கொலை....
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தமிழீழ ஆதரவாளர் ஒருவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
“ஈழத்தில் தமிழர் ஆட்சி அமைய வேண்டும்” என அவர் தன்னுடைய கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
ஆத்தூர் அருகே உள்ள தெற்கு உடையார் பாளையத்தில் வசித்து வந்த சிலோன் சண்முகம் என்ற சோ.மு.சண்முகம் (வயது 74) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், முதலிபாளையம் நால்ரோடு அருகில் உள்ள ஓரிடத்திலேயே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த இவர் தமிழீழத்தின் தீவிர ஆதரவாளர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்கொலைக்கு முன் அவர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி கையில் வைத்துக் கொண்டே மரணத்தை தழுவியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"கச்சதீவை மீட்க வேண்டும். தமிழீழம் மலர வேண்டும். ஈழத்தில் தமிழர் ஆட்சி அமைய வேண்டும்" என எழுதியுள்ளார்.
சண்முகத்தின் சடலம் திருப்பூர் அரசு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பின்னர் திருப்பூர் மின் மயானத்தில் சடலம் அடக்கம் செய்யப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழம் மலர வேண்டும்! கடிதம் எழுதி வைத்துவிட்டு தமிழீழ ஆதரவாளர் தற்கொலை....
Reviewed by Author
on
July 11, 2017
Rating:

No comments:
Post a Comment