18ம் திகதி கலந்துரையாடல்! வடமாகாண போக்குவரத்து துறை தலைவிதியை தீர்மானிக்கும்....
வவுனியாவில் இன்று மாலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற இ.போ.ச, தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்களுடனான கலந்துரையாடலையடுத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வடமாகாண போக்குவரத்துத்துறை அமைச்சர் ப. டெனீஸ்வரன், பொதுமக்களுக்கு பாதுகாப்பான சேவையினை வழங்குவதற்கு வவுனியாவில் 195 மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
இன்று இது தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கால அவகாசம் வழங்கப்பட்டு எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் வடமாகாண போக்குவரத்துத்துறையின் தலைவிதியை தீர்மானிக்கும் கலந்துரையாடலாக அமையும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண போக்குவரத்து தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் கடந்த காலத்திலும் தற்போதும் நிலவி வருகின்றது.
இதைத்தீர்க்கும் முகமாக இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று வவுனியா மாவட்டத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
சேவை வழங்குநர்களின் பல்வேறு விடயங்கள் இரு தரப்பினர்களும் சமுகமளித்திருந்தார்கள்.
தனியார் துறையின் ஒன்றியம், ஐந்து மாவட்டத் தலைவர்கள், சாலை முகாமையாளர்கள், தேசிய போக்குவரத்தின் ஆணைக்குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை அமைச்சர் மாகாண சபை உறுப்பினர், பணிப்பாளர்கள் என உயர்மட்டத்திலிருந்து கலந்து கொண்டார்கள்.
இன்றைய கூட்டமானது வட மாகாணத்தின் போக்குவரத்து தொடர்பான இருக்கின்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடியதாக இருக்கும் என்று கருதுகின்றேன் என்று மேலும் தெரிவித்துள்ளார்.
18ம் திகதி கலந்துரையாடல்! வடமாகாண போக்குவரத்து துறை தலைவிதியை தீர்மானிக்கும்....
Reviewed by Author
on
July 11, 2017
Rating:

No comments:
Post a Comment