மன்னர் பெனில்"ஈர நிலத்தை எதிர்பார்த்து"கவிதை நூல் அறிமுக விழா...மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
புன்னகை அமைப்புடன் வன்னிப்பட்டறை இணைந்து அறிமுகம் செய்யும் மன்னர் பெனில் ( முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி) அவர்களின் " ஈர நிலத்தை எதிர்பார்த்து " கவிதை நூல் அறிமுக விழா
08.07.2017 அன்று வவுனியா அருந்ததி மண்டபத்தில் மாலை 3 மணிக்கு கலாநிதி தமிழ்மணி அகளங்கன் ஐயா அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக........
வைத்திய கலாநிதி திரு.சி.சிவதாஸ் ஐயா அவர்களும்,
சிறப்பு விருந்தினர்களாக........
கௌரவ வடமாகாண சபை உறுப்பினர் திரு. லிங்கநாதன் ஐயா,
புன்னகை அமைப்பின் பணிப்பாளர்களாகிய கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திரு.சி.குணபாலன் ஐயா ,
முல்லைத்தீவு மாவட்ட நீர்ப்பாசன பிரதிப்பணிப்பாளர் திரு. ந.ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களும்,
கௌர விருந்தினர்கள், சிறப்பு விருந்தினர்கள், புன்னகை அமைப்பின் உறுப்பினர்கள், வன்னிபட்டறை அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
புத்தகத்தை கலாநிதி தமிழ்மணி அகளங்கன் ஐயா அவர்கள் வெளியிட முதலாம் பிரதியை புன்னகை அமைப்பின் பணிப்பாளாராகிய திரு. ந.ஸ்ரீஸ்கந்தராஜா ஐயா அவர்கள் பெற இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரதிகளை புன்னகை அமைப்பு கனடவின் உறுப்பினர்களாகிய திருமதி.இ.சுகுணா, திரு.செ.நவரட்ணராஜா ஆகியோரும் நான்காம் பிரதியை ஈச்சங்குளம் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் திரு தனபாலசிங்கம் அவர்கள் பெற்றுக்கொள்ள ஏனைய பிரதிகளை நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் அனைவரும் பெற்றுக்கொண்டனர்
. இறுதியாக கவிஞர் பெனில் அவர்கள் புன்னகை அமைப்பினரால் கௌரவிக்கப்பட்டார் விழா இனிதே நிறைவுற்றது.
மன்னர் பெனில்"ஈர நிலத்தை எதிர்பார்த்து"கவிதை நூல் அறிமுக விழா...மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 
 Reviewed by Author
        on 
        
July 10, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
July 10, 2017
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
July 10, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
July 10, 2017
 
        Rating: 


















 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment