மன்னார் முருங்கன் இசைமாலைத்தாழ்வு பகுதியில் புனித அந்தோனியார் திருச்சுருவம் உடைப்பு....
மன்னார் முருங்கன் இசைமாலைத்தாழ்வு பன்னவெட்டுவான் பகுதியில் புனித அந்தோனியார் திருச்சுருவம் உடைப்பு...
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக திருச்சுருவங்கள் உடைப்பு சம்பவமானது நடைபெற்றுவருகின்றது.
கரிசல் கப்பலேந்தி மாதா ஆலயம் அதைத்தொடர்ந்து தரவான் கோட்டை புனித மிக்கேல்சம்மனசு சுருவம் மேலும் ஒரு சுருவமான புனித அந்தோனியார் சுருவம் உடைக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்விடையம் தொடர்பாக அறியவருவது அப்பகுதியில் வேலையில் ஈடுபடும் பிரதேசவாசிகள் இன்று 10-07-2017 காலையில் புனித அந்தோனியார் திருச்சுருவம் உடைக்கப்பட்டு சிதறிக்கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தோடு கற்கிடந்தகுளம் பங்குத்தந்தை அவர்களிடம் தகவலை தெரிவித்தனர் பங்குத்தந்தை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
இப்படியான கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் மன்னார் மண்ணில் இனமத ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் செயற்படும் சில சூத்திரதாரிகளின் திட்டமிட்ட செயலுக்காக சும்மா இருக்கும் மக்களை குழப்பி குளிர்காயும் எட்டப்பன் வேலையை விடுங்கள் மக்களே சமயத்தலைவர்களே புரிந்துகொள்ளுங்கள் விஷமிகளின் எண்ணத்திற்கு பலியாகாதீர்கள்
நிதானமாய் செயற்படுங்கள்...... அவதானமாய் இருங்கள்......
மன்னார் முருங்கன் இசைமாலைத்தாழ்வு பகுதியில் புனித அந்தோனியார் திருச்சுருவம் உடைப்பு....
Reviewed by Author
on
July 10, 2017
Rating:

No comments:
Post a Comment