கேப்பாப்புலவில் குண்டு வெடிப்பு சத்தங்கள்!
கேப்பாப்புலவு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இறுதி யுத்தக் குண்டுகள் சில வெடித்துச் சிதறியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேப்பாப்புலவு பிரதான இராணுவ முகாம் தென்மேற்குப் பக்கம் இவ்வாறு குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக மாதிரி குடியிருப்பில் வசிக்கும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெடிப்புச் சம்பவம் குறித்து இராணுவத்தினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது,
இறுதி யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டுள்ளன. அவற்றை பாதுகாப்பான முறையில் இராணுவ கண்ணிவெடி அகற்றும் பிரிவு தகர்த்து அளித்துள்ளனர்.
குறித்த பகுதி காணிகளை பொது மக்களிடம் கையளிக்கவுள்ள நிலையில் இராணுவ முகாம் தவிர்ந்த ஏனைய சிறுகாட்டுப் பகுதி மற்றும் நந்திக்கடல் வெளிப் பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களே இவ்வாறு தகர்க்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளனர்.
கேப்பாப்புலவில் குண்டு வெடிப்பு சத்தங்கள்!
Reviewed by Author
on
July 10, 2017
Rating:

No comments:
Post a Comment