மகளிர் உலகக்கிண்ணம்: அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி....
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.
2வது அரையிறுதி போட்டியில் இந்தியா -அவுஸ்திரேலியா அணிகள் மோதின. போட்டி நடைபெறும் பகுதியில் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் 3 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.
42 ஓவர்கள் கொண்ட போட்டியாக இன்றைய ஆட்டம் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 42 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்கள் எடுத்துள்ளது. இதில் இந்திய வீராங்கனை ஹர்மன் ப்ரீத் கவுர் 115 பந்துகளில் 171 ரன் குவித்து அசத்தலாக அடித்துள்ளார்.
இதனை அடுத்து 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா 40.1 பவர் முடிவில் அணைத்து விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
மூனே (1), கேப்டன் மெக் லான்னிங் (0), போல்டன் (14) அடுத்தடுத்து வெளியேற 21 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
பின் வேகமாக ரன்கள் சேர்த்த வில்லானி, அரைசதம் எட்டினார். 75 ரன்னுக்கு (58 பந்து) அவுட்டானார். பெர்ரி (38) நிலைக்கவில்லை. பின் வந்த ஹீலே (5), கார்டுனர் (1), ஜோனாசன் (1), மேகன் (2) என, யாரும் நீடிக்கவில்லை.
இதனையடுத்து இந்தியா அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.
மகளிர் உலகக்கிண்ணம்: அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி....
Reviewed by Author
on
July 21, 2017
Rating:

No comments:
Post a Comment