தீரா ஆசை: உடல் முழுவதும் தங்கத்தில் ஜொலிக்கும் சாமியார்...
கோல்டன் பாபா எனும் சாமியார் ஒவ்வொரு ஆண்டும் ஹரித்வாரில் இருந்து டெல்லி வரை சுமார் 200 கிமீ கண்வார் எனும் புனித யாத்திரை மேற்கொள்வார்.
இந்த யாத்திரையின் போது தங்கத்தாலான ஆடைகள் அணிந்துகொண்டு, உடல் முழுவதும் தங்க நகைகளை அணிந்து செல்வதால் இவரை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இம்முறை புனித யாத்திரிக்காக வந்துள்ள கோல்டன் பாபா 50-க்கும் மேற்பட்ட தங்க நகைகளை அணிந்து வந்துள்ளார். அவற்றில் தங்க நெக்லஸ்கள், மோதிரங்கள், வளையல்கள் அடக்கம். அதிக எடை காரணமாக கழுத்து வலி, பார்வைக் குறைபாடு ஏற்படுவதால் இம்முறை 2 கிலோ நகைகளை கழற்றி வைத்து வந்துள்ளதாக இவர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு கண்வார் யாத்திரைக்கான வெள்ளி விழாவைக் கொண்டாடவுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.
சிறுவயதில் இருந்தே தங்கத்தின் மீது ஆசை கொண்ட காரணத்தால் இவ்வாறு நகைகளை அணிந்துகொள்கிறேன், ஜவுளித்தொழில் செய்து வந்த நான் சன்னிசாச வாழ்க்கைக்கு மாறிவிட்டேன்.
என்னிடம் உள்ள சீடர்களில் யார் ஒழுக்கமுள்ள சீடராக இருக்கிறாரோ அவருக்கு எனது சொத்தினை எழுதி வைப்பேன் என கூறுகிறார் இந்த கோல்டன் பாபா.
தீரா ஆசை: உடல் முழுவதும் தங்கத்தில் ஜொலிக்கும் சாமியார்...
Reviewed by Author
on
July 21, 2017
Rating:

No comments:
Post a Comment