மடு தேவாலய பகுதியில் சூரிய மின் உற்பத்தி வினியோக திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய-(வீடியோ)
சூரிய மின் உற்பத்தி வினியோக திட்டத்தை வைபவ ரீதியாக நேற்று வியாழக்கிழமை (6) மாலை மடு தேவாலைய பகுதியில்,மின் சக்தி மற்றும் மின் வலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வைபவ ரீதியாக ஆராம்பித்து வைத்தார்.
சுமார் 6 இலட்சம் ரூபாய் அரச நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
சுமார் 6 இலட்சம் ரூபாய் அரச நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆரம்ப நிகழ்வில் இலங்கை மின் அத்தியட்சகர் டபில்யூ.பி.கனேகல,வடமாகாண மின் முகாமையாளர் டி.கே.டி.குனதிலக,மின் உற்பத்தி,மின் சக்தி அதிகாரசபையின் தலைவர் கீர்த்தி விக்கிரம ரத்தின,இலங்கை மின் சக்தி,மீள் புத்தாக்கள் சக்தி அமைச்சின் அபிவிருத்திப்பிரிவு பணிப்பாளர் ஜே.ஜீ.எல்.சுலக்ஸன ஜெயவர்ஜி உற்பட மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை அடிகளார்,மடு பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சூரிய மின் உற்பத்தி வினியோக திட்டத்தை மடு தேவாலைய பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து மடு திருத்தலத்தில் இடம் பெற்ற விசேட திருப்பலியிலும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மடு தேவாலய பகுதியில் சூரிய மின் உற்பத்தி வினியோக திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய-(வீடியோ)
Reviewed by NEWMANNAR
on
July 07, 2017
Rating:

No comments:
Post a Comment