வித்தியா கொலையில் முக்கிய சாட்சியம்! முதன்முறையாக நீதிமன்றில் சிறப்பு அதிரடிப் படையினர் குவிப்பு
கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய சாட்சியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் முதன்முறையாக நீதிமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் சிறப்பு அதிரடிப் படையினரும், வழமைக்கு மாறாக அதிக சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை விசாரணை செய்த குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் சாட்சி முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது.
இவர் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய தீர்ப்பாயம் முன்னிலையில் சாட்சியம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியாக அவர் செயற்பட்டார் என குறிப்பிடப்படுகின்றது.
வித்தியா படுகொலை வழக்கில் 9 சந்தேகநபர்களுக்கும் எதிரான சாட்சியங்கள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் முக்கிய சாட்சியம் வழங்கப்படுகின்றது.
இதேவேளை, வித்தியா படுகொலை வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் "ட்ரயல் அட்பார்" முறையில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
இதில் முதற்கட்டமாக தொடர் விசாரணைகள் நடத்தப்பட்டு தற்போது இரண்டாம் கட்டமாக கடந்த 18ம் திகதி தொடர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வித்தியா கொலையில் முக்கிய சாட்சியம்! முதன்முறையாக நீதிமன்றில் சிறப்பு அதிரடிப் படையினர் குவிப்பு
Reviewed by NEWMANNAR
on
July 20, 2017
Rating:

No comments:
Post a Comment