லண்டனில் அனைவரையும் நெகிழ வைத்த இலங்கை வீரர்! சர்வதேச ஊடகங்கள் பாராட்டு-Photos
லண்டனில் நடைபெற்று வரும் பாரா தடகள போட்டியில் இலங்கை வீரரின் நெகிழச்சியான செயற்பாடு சர்வதேச ரீதியாக அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இலங்கை வீரரான அனில் பிரசன்ன ஜயலத் D42 ஊனமுற்றோருக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டார்.
முதல் 50 மீற்றர் தூரம் வரை அனில் பிரசன்ன முன்னிலையில் ஓடிக் கொண்டிருந்தார்.
எனினும் போட்டியின் இறுதி 40 மீற்றர் தூரத்தின் போது தென்னாபிரிக்க வீரர் அனில் ஓடிக் கொண்டிருந்த இடத்திற்கு வேகமாக வந்துள்ளார்.
எப்படியிருப்பினும் அவருக்கு அவரது காலில் பொருத்தப்பட்டுள்ள உபகரணத்தினால் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதனை அனில் புரிந்து கொண்டுள்ளார்.
ஓடி வரும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தென்னாபிரிக்க வீரர் அனில் பிரசன்னவுக்கு அருகில் வந்து விழுந்துள்ளார்.
ஓட்ட எல்லைக் கோட்டை கடக்க சொற்ப விநாடிகள் உள்ள நிலையில், கீழே விழுந்து வீரருக்கு அருகில் ஒருவரும் செல்லவில்லை. இதனை அவதானித்த அனில் பிரசன்ன உடனடியாக விழுந்த வீரரின் திசையை நோக்கி ஓடியுள்ளார்.

அந்த போட்டியில் அவர் தோல்வியடைந்த போதிலும் அனைவரினதும் மனங்களை அவர் வென்று விட்டதாக சர்வதேச ஊடகங்கள் புகழராம் சூட்டியுள்ளன.
லண்டனில் அனைவரையும் நெகிழ வைத்த இலங்கை வீரர்! சர்வதேச ஊடகங்கள் பாராட்டு-Photos
Reviewed by NEWMANNAR
on
July 20, 2017
Rating:

No comments:
Post a Comment