அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பட்டித்தோட்டம் கிராம அலுவலகர் பிரிவில் பொலிஸ் நடமாடும் சேவை

இலங்கை பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பட்டித்தோட்டம் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட பொலிஸ் நடமாடும் சேவையினை வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்று (21) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ தலைமையில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பட்டித்தோட்டம் சன சமூக நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'கிராமத்து பொலிஸ்' எனும் கருப்பொருளில் பொலிஸ் நடமாடும் சேவை இன்று(21) வெள்ளிக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

-குறித்த நடமாடும் சேவை இன்று(21) வெள்ளிக்கிழமை தொடக்கம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி வரையிலான ஒர மாதம் இடம் பெறவுள்ளது.

குறித்த பொலிஸ் நடமாடும் சேவையின் மூலம் மன்னார் தலைமையக பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தாராபுரம் கிழக்கு, தாரபுரம் மேற்கு, தாழ்வுபாடு, எழுத்தூர் மற்றும், கீரி,பட்டித்தோட்டம் ஆகிய ஐந்து கிரம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட மக்கள் பொலிஸ் நிலையத்தினூடாக பெற்றுக்கொள்ள வேண்டிய சகல சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை குறித்த நடமாடும் சேவையினூடாக குறித்த கிராமங்களில் சமயம்,கலாச்சாரம்,கல்வி,சுகாதாரம்,விளையாட்டு உள்ளிட்ட முக்கிய விடையங்கள் தொடர்பிலும் உரிய பலனை பெற்றுக்கொள்ள முடியும் என மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி வரையிலான ஒரு மாத காலம் இடம் பெறவுள்ள குறித்த பொலிஸ் நடமாடும் சேவையினூடாக மன்னார் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தாராபுரம் கிழக்கு, தாரபுரம் மேற்கு, தாழ்வுபாடு, எழுத்தூர் மற்றும்,கீரி,பட்டித்தோட்டம் ஆகிய ஐந்து கிரம சேவையாளர் பிரிவுக்குற்பட்ட மக்கள் மன்னார் பட்டித்தோட்டம் சன சமூக நிலையத்தில் இடம் பெற்று வரும் 24 மணி நேர பொலிஸ் நடமாடும் சேவையின் மூலம் தமது அவசர தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் எனவும், அதற்கு இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர அவர்களின் அலோசனைக்கு அமைவாக வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அவர்களின் நேரடி கண்ணகானிப்பில் இடம் பெறும் குறித்த நமாடும் சேவையினூடாக குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்களை பூரண பயணடையுமாறு மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.









மன்னார் பட்டித்தோட்டம் கிராம அலுவலகர் பிரிவில் பொலிஸ் நடமாடும் சேவை Reviewed by NEWMANNAR on July 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.