அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கவிதாயினி வெற்றிச்செல்வி அவர்களின் ஆறு நூல்களின் அறிமுகவிழா சிறப்பாக நடைபெற்றது....

  போருக்கு பின்னரான வரலாற்றுப்பதிவுகளை இலக்கியமாக தொகுத்தளித்த எழுத்தாளர் மன்னார் கவிதாயினி வெற்றிச்செல்வி வேலுசந்திரகலா அவர்களின் ஆறு நூல்களின் அறிமுகவிழா சிறப்பாக இடம்பெற்றது.

மாற்றுத்திறனாளி மாதர்களின் நலனோம்பு அமைப்பு - கிளிநொச்சி மாவட்ட ஏற்பாட்டில்  பெண்கள் , இளைய தலைமுறையினரின் பங்கு பற்றுதல் திறனை ஊக்குவிக்கும் பொருட்டும்
வெற்றிச்செல்வி  அவர்களின் ஆறு நூல்களின் அறிமுகவிழா வெகுவிமர்சையாக 08.07.2017 சனிக்கிழமை கிளிநொச்சி RDHS  கேட்போர் கூடத்தில் பிரியா ராஜேந்திரன் தலைமையில் இடம்பெற்றது .

திருமதி. பொன்தியாகம் அம்மா முதன்மைச்சுடரினை ஏற்றி ஆரம்பித்து வைத்தார் அதனை தொடர்ந்து வைத்திய கலாநிதி சி.சிவதாஸ் உளநல வைத்தியர் உளநலபிரிவு வவுனியா அவர்களது இனிமையான வாழ்த்துரையுடன் நிகழ்வு இனிதே ஆரம்பித்தது.

ஆறிப்போன காயங்களின் வலி
நூல் உரையின் உணவுப்பகிர்வினை செல்வி . தி.வினோதினி (எழுத்தாளர்) மிகவும் அருமையான அமைதியான மொழிநடையிலும் வழங்கி இருந்தார்
ஈழப்போரின் இறுதியாட்கள்
நூல் உரையினை செல்வன் . ஜெயராசா ஜெயமாருதி
மருத்துவபீட மாணவன்
அவர்களால் மிகவும் உணர்வு பூர்வமான கருத்துப்பகிர்வினை வழங்கி எம்மை 2009 க்கு முன் வாழ்ந்த காலப்பகுதிக்கு அழைத்து சென்று நினைவுகளை மீட்டி பார்க்க வைத்திருந்தார்.

இளையதலைமுறையின் எழுத்தும் வாசிப்பும் -என்ற தலைப்பில் செல்வி . அகிலினி நந்தகுமார் ஆங்கில, தமிழ் இலக்கியங்கள் , கதைபுத்தகங்கள் மற்றும் வரலாற்று புத்தகங்கள் தொடர்பாக மிகவும் இளைய தலைமுறைக்கே ஆன தேடலுடன் பல ஆய்வு விடயங்களை பற்றி பேசி அவையோரை பிரமிக்க வைத்து விட்டார் . அத்துடன் எதிர்காலத்தில் சிறந்த ஒரு எழுத்தாளராக வருவார் என்ற நம்பிக்கையுடன் பெற்றோருக்கு பெருமை சேர்த்திருந்தார்.

கவிதை நூல்களின் உரை

திரு.அருணாச்சலம்.சத்தியானந்தன்
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க இலங்கைக் கிளைத் தலைவர் மற்றும் கிளிநொச்சி மத்திய கல்லூரி ஆசிரியர்
உணர்வுக்கவிதை ஒன்றுடன் ஆரம்பித்து கவிதை பற்றிய ஆய்வுகளை காத்திரமான கருத்துடன் மிக அருமையாக வழங்கி இருந்தார்.

அதனைத்தொடர்ந்து நூலாசிரியரான வெற்றிச்செல்வியின் ஏற்புரையும் நன்றியுரையுடன்  இடம்பெற்றது.
பல பேரது வேண்டுகோள் எதிர்பார்ப்பான அடுத்த வெளியீடான 10 வது புத்தகத்தின் வேலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் அடுத்த வருடம் வெளியிட உள்ளதாக என்ற இனிய அறிவிப்புடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது

எமது குறுகிய கால அழைப்பை ஏற்று வருகை தந்த அனைவருக்கும்
நிகழ்வு நல்ல முறையில் நடைபெற நேரடியாகவும் , மறைமுகமாகவும் உதவிய அனைவருக்கும்
நூலாசிரியர் வெற்றிச்செல்வி அக்கா மற்றும் எம் மாற்றுத்திறனாளி மாதர்களின் நலனோம்பு அமைப்பு சார்பாகவும் எமது இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்...!!!































மன்னார் கவிதாயினி வெற்றிச்செல்வி அவர்களின் ஆறு நூல்களின் அறிமுகவிழா சிறப்பாக நடைபெற்றது.... Reviewed by Author on July 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.