`இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' படத்தில் இணைந்த வெளிநாட்டு கலைஞர்கள்....
`இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' படத்தில் வெளிநாட்டு கலைஞர்கள் பலர் இணைந்திருப்பதாக புதிய தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது.
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் `இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் இருந்து ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக மற்றொரு பாடலை இயக்க படக்குழு தீவிரம் காட்டி வருகிறதாக கூறப்டுகிறது.
அந்த பாடல் பிரமாண்டமாக எடுக்கப்பட உள்ளதாகவும், அந்த பாடலுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும். அதில் 30-க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டு நடனக் கலைஞர்கள் பங்கேற்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தில் வடிவேலு ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார். சிம்பு தேவன் இயக்கவிருக்கும் இப்படத்தை ஷங்கரின் எஸ்.பிக்சர்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க இருக்கிறது.
`இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' படத்தில் இணைந்த வெளிநாட்டு கலைஞர்கள்....
Reviewed by Author
on
August 31, 2017
Rating:

No comments:
Post a Comment