அண்மைய செய்திகள்

  
-

மன்னாரில் ஆரம்பமானது இலங்கையின் 4 ஆவது பூப்பந்தாட்டப்போட்டி-Photos

உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் ஏற்பாட்டில்,இலங்கையின் 4 ஆவது பூப்பந்தாட்டப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை (25) காலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தின் உள்ளக அரங்கில் ஆரம்பமாகியுள்ளது.

இலங்கையில் 4 ஆவது தடவையாக இடம் பெறும் குறித்த போட்டி இம் முறை மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இன்று(25) வெள்ளிக்கிழமை 25 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை குறித்த போட்டி இடம் பெறவுள்ளது.

ஆரம்ப நிகழ்வான நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (25) காலை பிரதம விருந்தினராக வடமாகண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், கௌரவ விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மற்றும், விருந்தினர்களாக ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் உற்பட உலகத்தமிழர் பூப்பந்தாட்ட பேரவையின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

-இதன் போது குறித்த பூப்பந்தாட்டப் போட்டியினை வடமாகண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் வைபவ ரீதியாக ஆராம்பித்து வைத்தார்.

குறித்த போட்டியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

குறித்த போட்டியின் இறுதி நிகழ்வகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர்

(25-08-2017)
















மன்னாரில் ஆரம்பமானது இலங்கையின் 4 ஆவது பூப்பந்தாட்டப்போட்டி-Photos Reviewed by NEWMANNAR on August 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.