சர்வதேச விசாரணையின் மூலமே காணாமல் போனவர்களுக்கான நீதி கிடைக்கும்!
சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே காணாமல் போனவர்களின் விடயத்திற்கு நீதி கிடைக்கும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியவை இணைந்து மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்ட யுத்தம் முடிவடைந்து சுமார் 8 வருடங்கள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
இருந்த போதிலும், இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட மற்றும் இராணுவத்தினரினால் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டவர்களின் நிலை இது வரை கேள்விக்குறியாகவே உள்ளது என அவர் தொடர்ந்தும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போல் நிஷந்தன்
சர்வதேச விசாரணையின் மூலமே காணாமல் போனவர்களுக்கான நீதி கிடைக்கும்!
Reviewed by Author
on
August 31, 2017
Rating:
Reviewed by Author
on
August 31, 2017
Rating:


No comments:
Post a Comment