மன்னார் கிளை மின்சார சபை அதிகாரிளுக்கு அன்பான வேண்டுகோள்....
இலங்கை மின்சார சபை மன்னார் கிளை அதிகாரிளுக்கு அன்பான வேண்டுகோள்....
தற்போது (08-08-2017--03-09-2017) வரை க.பொ.உயர்தரப்பரீட்சை நடைபெற்றுவருவதால் அதேபோல் ஐந்தாம் ஆண்டுக்கான புலமை பரிசுப்பரீட்சை 20-08-2017 மாணவமாணவிகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு அவ்ர்களின் கல்வி கற்றல் செயற்பாட்டிற்கு தடையாக இருக்கும் மின்சாரத்தடை மற்றும் மின்வெட்டுப்பிரச்சினைகளை தகுந்த முறையில் கையாண்டு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி பரீட்சையினை சிறந்த முறையில் எழுதுவதற்கு உதவுமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு-
- அறுந்தும் தொய்வாகவும் கிடக்கும் மின்னிணைப்பு வயர்களை சீர்செய்யவேண்டும்.
- நீர் தேங்கி நிற்கும் இடங்களில் (மழைக்காலம் ஆரம்பமாகின்றது)
- சில இடங்களில் மின்னிணைப்பு வயர்கள் சிக்கல் தாறுமாறாக இருப்ப்தாலும் காற்றுக்கு உராயப்பட்டு மின்கசிவும் மின்னொழுக்கும் ஏற்படவாய்ப்பாக அமைகின்றது.
- உடைந்த பழுதான இத்துப்போன முறிந்த பழைய மோசமான நிலையில் உள்ள மின்கம்பங்களையும்.....
தற்போது புதிய மின்கம்பங்களையும் புதிய பாதுகாப்பான மின்னிணைப்பு வயர்களையும் பொருத்தி வருகின்றீர்கள் இச்ச்ந்த்ர்ப்பத்தில் தான் ஞாபகப்படுத்த விரும்புகின்றோம்.

மன்னார் கிளை மின்சார சபை அதிகாரிளுக்கு அன்பான வேண்டுகோள்....
Reviewed by Author
on
August 11, 2017
Rating:

No comments:
Post a Comment