தேசிய முத்திரை கண்காட்சி 2017 - மாணவர் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன..!
தேசிய முத்திரை கண்காட்சி 2017 - மாணவர் ஆக்கங்கள்
வரவேற்கப்படுகின்றன..!தபால் திணைக்களத்தின் பொன்விழாவை முன்னிட்டு இவ்வருடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய முத்திரை கண்காட்சி 2017க்கான ஆக்கங்களை எதிர்பார்ப்பதாக தபால் தலைமையகம் அறிவித்துள்ளது.
அதற்கமைய தரம் 6 தொடக்கம் உயர் வகுப்பு மாணவர்கள் மற்றும் வளர்ந்தோரிடமிருந்து முத்திரைககான ஆக்கங்களை எதிர்பார்ப்பதாகவும் பாடசாலை மாணவர்கள் வயதடிப்படையில் மூன்று பிரிவுகளின் கீழ் சித்திர ஆக்கங்களை அனுப்பி வைக்கலாம் என்றும் தபால் தலைமையகம் அறிவித்துள்ளது.
ஆக்கங்களை அனுப்பி வைப்பதற்கான இறுதித் திகதி ஒக்டோபர் 14 ஆகும்.
இவ்விடயம் தொடர்பான மேலதிக விபரங்களை 0112 326 163, 0114 927 248 அல்லது 1950 என்ற ஹொட்லைன் இலக்கத்துடனோ தொடர்புகொள்ளலாம்
தேசிய முத்திரை கண்காட்சி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 மற்றும் 29ம் திகதிகளில் கொழும்பு தபால் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
Source : அரசாங்க தகவல் திணைக்களம்.
தேசிய முத்திரை கண்காட்சி 2017 - மாணவர் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன..!
Reviewed by Author
on
September 29, 2017
Rating:

No comments:
Post a Comment