அண்மைய செய்திகள்

recent
-

பிரபாகரன் மீது அளவற்ற மதிப்புக்கொண்ட குர்திஸ்தான் நாட்டு மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி


குர்திஸ்தான் ஈராக்கில் இருந்து பிரிந்து செல்வதை ஆதரித்து 91.83%வீதமான மக்கள் பொதுசன வாக்கெடுப்பில் வாக்களித்துள்ளார்கள். குர்திஸ்தான் இன மக்களின் தனிநாட்டுப் போராட்டத்திற்கும், ஈழப் போராட்டத்திற்கும் நிறைய ஒற்றுமை உண்டு.
       
நிலம், மொழி, உரிமை, காலாச்சார அடையாளங்களுக்கான போராட்டம். வெற்றி தோல்விகளைக் கண்டு ஐம்பது ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போராட்டமாகும். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீதும், விடுதலைப் புலிப் போராளிகள் மீதும் குர்திஸ் போராளிகள் அன்பும் மதிப்பும் கொண்டவர்கள். அவர்கள் சர்வதேச அரசியல்களால் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்கள்.

தற்போது, அவர்கள் சந்தித்திருக்கும் ஈராக்கின் அச்சுறுத்தல் மற்றும் நெருக்கடியிலிருந்தும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.

அவர்களின் தனிநாட்டு போராட்டம், ஈழத் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடியது. அத்துடன் ஈராக் என்ற கடும்போக்கான நாட்டில் நடைபெறும் அவர்களின் உறுதியான போராட்டம் எமக்கு பல வழிகளிலும் படிப்பினைகளையும் தரக்கூடியது. மூன்று கோடிக்கும் குறைவான மக்கள்தொகையோடு நான்கு நாடுகளுக்கு (துருக்கி,சிரியா,ஈரான்,ஈராக்) நடுவில் விடுதலைப்போரை நிகழ்த்தி இன்று உலக அரங்கில் தனிநாடு கோரிக்கைக்கான பொதுவாக்கெடுப்புக்கு அழுத்தம் தந்து புதியதேசமாக பிறக்கவிருக்கிறது குர்திசுத்தான். தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் போலவே பெண்போராளிகளை நிறைத்து வைத்து சமராடிய போராளிகளாக குர்தீசியர்கள் புலப்படுகிறார்கள்.

விடுதலை வேட்கையோடு கண்களெல்லாம் தாயகக்கனவைச் சுமந்து மாவீர்களைக் கொடையாய்த் தந்து கட்டியெழுப்பிய நாட்டை துரோகத்தால் இழந்து நிற்கும் தேசிய இனத்தின் பிள்ளைகளுக்கு இந்தப் பூமிப்பந்தில் ஏதேனுமொரு தேசம் பிறந்தால் உண்டாகும் மகிழ்வின் அளவை அறுதியிட முடியாது.

அதே மட்டில்லா மகிழ்வோடு பிறக்கவிருக்கிற புதிய குர்திசுத்தானை நேசிக்கிறோம். சுற்றியுள்ள நாடுகளைப் போலல்லாமல் தனித்த வளங்கள் கொண்டிருக்கிற குர்திசுத்தான் போரின் கோரத்திலிருந்து மீண்டு செழுமைபெற்று உலக அரங்கில் தன்னிகரற்ற தன்மையைப் பெற்று விளங்க வாழ்த்துகிறோம்.

பிரபாகரன் மீது அளவற்ற மதிப்புக்கொண்ட குர்திஸ்தான் நாட்டு மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி Reviewed by Author on September 29, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.