தேசிக விநாயகம் பிள்ளை மரணம் அடைந்த நாள்: 26-9-1954
தேசிக விநாயகம் பிள்ளை 1954-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ந்தேதி மரணமடைந்தார்.
தேசிக விநாயகம் பிள்ளை மரணம் அடைந்த நாள்: 26-9-1954
தேசிக விநாயகம் பிள்ளை 20 நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். இவர் 1876-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ந்தேதி சிவதாணுப்பிள்ளை- ஆதிலட்சுமி தம்பதியருக்கு மூன்றாவது பிள்ளையாக தேசிக விநாயகம் பிறந்தார்.
ஒன்பதாவது வயதில் தன் தந்தையை இழந்தார். எப்.ஏ. படித்த கவிமணி பின் ஆசிரியர் பயிற்சி படித்து தான் படித்த பள்ளியிலேயே ஆசிரியர் ஆனார். உமையம்மை எனும் பெண்ணை 1901-ல் திருமணம் முடித்தார்.
நாஞ்சில் நாட்டார் தன் மனைவியை குட்டி, பிள்ளாய் என்று அழைத்து கொண்டிருந்த நாட்களில் கவிமணி தன் மனைவியை தாயி என்று மரியாதையுடன் அழைப்பார்.
குழந்தைப்பேறு இல்லாத கவிமணி தனது அக்காள் மகன் சிவதாணுவை தனது மகன் போலவே வளர்த்தார்.
எட்வின் ஆர்னால்டின் எழுதிய ஆசிய ஜோதி-யைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார். ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். 1922-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.
முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரி விரிவுரையாளராகவும் பணிபுரிந்து, 1931ல் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் தம் மனைவியின் ஊராகிய புத்தேரியில் தங்கிக் கவிதை இயற்றுவதிலும் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். 1954-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ந்தேதி மரணமடைந்தார். 24 டிசம்பர் 1940-ல் சென்னை பச்சைப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் கவிமணி என்ற பட்டம் வழங்கினார்.
1943-ல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார். 1954=ல் கவிமணிக்கு தேருரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. அக்டோபர் 2005-ல் இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.
தேசிக விநாயகம் பிள்ளை மரணம் அடைந்த நாள்: 26-9-1954
Reviewed by Author
on
September 26, 2017
Rating:
Reviewed by Author
on
September 26, 2017
Rating:


No comments:
Post a Comment