இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியில் உள்ள 3 ‘ஸ்டார்கள்’ எதை குறிக்கின்றது?
இந்திய கிரிக்கெட் வீரர்கள் அணியும் ஜெர்ஸியில் புதிதாக இடம்பெற்றுள்ள 3 ஸ்டார்கள் எதை குறிக்கின்றன என்பது பற்றி அறிந்துகொள்வோம்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியில் உள்ள 3 ‘ஸ்டார்கள்’ எதை குறிக்கின்றது?
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியில் சமீபகாலமாக எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதில் முக்கியமாக நிறம், விளம்பரதாரர் லோகோ மற்றும் புதிதாக இடம்பெற்றுள்ள 3 ஸ்டார்கள்.
ஸ்டார் நிறுவனத்திடம் இருந்து ஸ்பான்சரை ஓப்போ செல்போன் நிறுவனம் கைப்பற்றியது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப்பின் இந்திய வீரர்களின் ஜெர்ஸியில் ஓப்போ விளம்பரம்தான் அச்சிடப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களின் உடையில் இடம் பெற்றிருக்கும் எண்கள், பெயர், நிறம் என அனைத்திற்கும் ஒரு காரணம் இருக்கும். அதை உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே நமக்குத் தெரியும். அப்படி கடந்த 18-ந்தேதி ஜெர்ஸியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அதில் பிசிசிஐ லோகோவுக்கு மேல் 3 ஸ்டார்கள் இடம்பெற்றுள்ளது.
இது காவல்துறை அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் ஸ்டார்கள் போல் இருக்கிறது என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். இதற்கான விளக்கம் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது இந்திய கிரிக்கெட் அணி இதுவரை 3 முறை உலகக் கோப்பை வென்றுள்ளதை குறிக்கும் விதமாக இது பொறிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் தனது முதல் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, இரண்டாவது முறையாக 2007-ல் தோனி தலைமையில் டி20 உலகக்கோப்பையை வென்றது. பின்னர் 2011-ல் மீண்டும் தோனி தலைமையில் இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியில் உள்ள 3 ‘ஸ்டார்கள்’ எதை குறிக்கின்றது?
Reviewed by Author
on
September 29, 2017
Rating:

No comments:
Post a Comment