இங்கிலாந்திடம் இருந்து சுவாசிலாந்து விடுதலை அடைந்தது (செப்.6, 1968)
அரசியலமைப்பு சட்டத்தின்படி 1967-ல் தேர்தல் நடத்தப்பட்டு, 1968-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி இங்கிலாந்திடம் இருந்து சுவாசிலாந்து விடுதலை அடைந்தது
இங்கிலாந்திடம் இருந்து சுவாசிலாந்து விடுதலை அடைந்தது (செப்.6, 1968)
தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாடு சுவாசிலாந்து. ஆப்பிரிக்காவின் மிகச் சிறிய நாடுகளில் இதுவும் ஒன்று. இந்நாட்டின் கிழக்கே மொசாம்பிக் நாடும் மற்ற பகுதிகளில் தென்னாப்பிரிக்காவும் சூழ்ந்துள்ளன. 19-ம் நூற்றாண்டில் இங்கு ஆட்சி செய்த இரண்டாம் சுவாசி மன்னரின் பெயரே, இந்நாட்டிற்கு பெயராகவும், நாட்டு மக்களின் இனமாகவும் அமைந்துள்ளது.
சுவாசி என்பது பண்டு ஆதிவாசிகளைச் சேர்ந்த ஒரு இனம் ஆகும். சுவாசி மக்கள் 15 மற்றும் 16-ம் நூற்றாண்டுகளில் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள். ஆங்கிலோ-போயர் போரின்போது, 1902ல் சுவாசிலாந்து நாட்டை இங்கிலாந்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
பின்னர் 1963-ம் ஆண்டு விடுதலை அரசியலமைப்பு பிரகடனம் செய்யப்பட்டது. சுவாசி தேசியக் கவுன்சிலின் எதிர்ப்பையும் மீறி, 1964-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு முதல் சட்டமன்ற கவுன்சில் உருவாக்கப்பட்டது. பின்னர் இந்த அரசாங்கம் மூலம் அசல் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதனை இங்கிலாந்து ஏற்றுக்கொண்டது.
இந்த அரசியலமைப்பு சட்டத்தின்படி 1967-ல் தேர்தல் நடத்தப்பட்டு, 1968-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி அந்நாடு முழு விடுதலை பெற்றது.
சுவாசிலாந்தில் மொசாம்பிக் எல்லையில் பல மலைகளும் மழைக்காடுகளும் உள்ளன. பெரிய உசுத்து ஆறு உட்படப் பல ஆறுகள் இந்நாட்டில் பாய்கின்றன. சுவாசிலாந்து ஆப்பிரிக்காவின் ஒரு செல்வங்கொழிக்கும் நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், உலகின் வறிய நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இங்குள்ள மக்களில் 35 சதவீதத்திற்கும் அதிகமானோர் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்திடம் இருந்து சுவாசிலாந்து விடுதலை அடைந்தது (செப்.6, 1968)
Reviewed by Author
on
September 06, 2017
Rating:

No comments:
Post a Comment