தென்னிலங்கையில் மீண்டும் சாதனையை புதுப்பித்த யாழ். வீராங்கனை
வட மாகாணத்தை சேர்ந்த அனித்தா ஜெகதீஸ்வரன், தேசிய ரீதியாக ஏற்படுத்திய தனது சாதனையை மீண்டும் புதுப்பித்துள்ளார்.பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் சாதனை படைத்துவரும் அனித்தா இன்று மீண்டும் மற்றுமொரு சாதனையை படைத்துள்ளார்.அனித்தா கோலூன்றிப் பாய்தல் போட்டியில் இலங்கை சாதனையை மீண்டும் புதுப்பித்த நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.
மாத்தறை - கொடவில மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய 43வது தேசிய விளையாட்டு விழாவில் அவர் இந்த சாதனையை மேற்கொண்டுள்ளார்.அதற்கமைய அனிதா 3.48 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனையை நிலைநாட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தென்னிலங்கையில் மீண்டும் சாதனையை புதுப்பித்த யாழ். வீராங்கனை
Reviewed by Author
on
September 23, 2017
Rating:

No comments:
Post a Comment