உலகையே பிரம்மிக்க வைத்த சர்வதேச கலாச்சார, கலை மையம்! படங்கள்
சீனாவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் சர்வதேச கலாச்சார மற்றும் கலை மையம் உருவாகி வருகின்றது.
இதன் நிர்மாணப்பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது முடியும் நிலையை அடைந்துள்ளது.
Meixi Lake சர்வதேச கலாச்சாரம் மற்றும் கலை மையம் முதல் முறையாக பொது மக்களின் பார்வைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
சீனாவின் ஹூனான் (Hunan) மாகாணத்தின் தலைநகரான சான்ங்ஷா (Changsha)வில் Meixi Lakeஇல் இந்த சர்வதேச கலாச்சார மற்றும் கலை மையம் உருவாகி வருகின்றது.
சீனாவின் நுட்பமான வேலைப்பாடுகளுடன் இந்த மையம் மிகவும் பிரம்மாண்டமாகவும், அழகாகவும், பார்ப்பவரை வியக்க வைக்கும் வகையிலும் உருவாகி வருகின்றது.
இதில் சிறிய திரையரங்கு (Smalla Theatre), Art Museum, Grand Theatre போன்றவை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
உலகையே பிரம்மிக்க வைத்த சர்வதேச கலாச்சார, கலை மையம்! படங்கள்
Reviewed by Author
on
September 01, 2017
Rating:

No comments:
Post a Comment