திலிபனே---நீ தியாகத்தின்...... தீ
தியாகத்தின் திருவுருவம் இவனே
தியாகத்தினை ஏற்றது இவனது பருவமே
சிந்தனைகள் எல்லாம்
சிகரம் தொட வேண்டும் என்றாய்
ஆயுதத்தினை களைந்த..... நீ
அகிம்சையினால் தாக்கினாய்-கொள்கை
குறிக்கோளை நோக்கினாய்
குமுறும் தமிழினத்தினைப்பார்க்கிறாய்
கோபம் கொண்டு கொதித்து எழுகிறாய்
கொஞ்ச நேரத்தில் பொறுமையாகிறாய்
கொண்ட கோரிக்கை நிறைவேறும் என-உன்
கொள்கையில் நிலைத்திருந்தாய்....
இந்தியாவும் சிந்திக்காமல் வந்து
இலங்கையரசுடன் இணைந்து
ஈழத்தில் குடிகொண்டு செய்த கொடுமை-நினைவுகளாய்
இன்னும் இதயத்தில் உண்டு
ஐக்கியத்திற்காய் ஐயமின்றி...
ஐந்தம்சக் கோரிக்கையால்-அகிம்சையின்
ஐயனான மகாத்துமா காந்தி நாட்டிற்கே..பாடம் புகட்டியதால்
ஐக்கிய நாடுகள் சபை வரை.....
ஊரெழு தந்த உத்தமனே-தாயக
உணர்வுடன் அகிம்சை வழிகண்ட நாயகனே
உரிமைக்காய் ஊண் உறக்கமின்றி
உயிர் தந்த காவலனே .....
பார்த்தீபன் இராசையாவே -நீ
பார்க்க விரும்பிய தமிழீழம்-நாமும் இன்னும்
பார்க்கவில்லை ஆனாலும் தோர்க்கவில்லை
பார்ப்போம் விரைவில் பரவசக்கரையில்....
-தமிழ்மாடு-
ஈழத்திற்காய் விதைக்கப்பட்டுள்ள வித்துக்கள்
ஈழம் மலரும் போது விருட்சமாகும்
பார்த்தீபன் இராசையா(திலிபன்)
யாழ்ப்பாணம் ஊரெழு
பிறப்பு- 27-09 - 1963
உண்ணாவிரதம்- 15-09-1987
இறப்பு 26- 09-1987
திலிபனே---நீ தியாகத்தின்...... தீ
Reviewed by Author
on
September 16, 2017
Rating:

No comments:
Post a Comment