1000 கார்களை திருடிய வடகொரியா: 50 ஆண்டுகளாக ஏமாற்றியது அம்பலம்
ஸ்வீடன் நாட்டில் இருந்து 1000 கார்களை வாங்கிய வடகொரியா 2.4 பில்லியன் பவுண்ட் தொகையை செலுத்தாமல் பல ஆண்டுகளாக ஏமாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்வீடன் நாட்டில் இருந்து கடந்த 43 ஆண்டுகளுக்கு முன்னர் ஆயிரம் வால்வோ கார்களை வடகொரியா வாங்க முடிவு செய்துள்ளதுடன், அந்த கார்களை தங்கள் நாட்டுக்கு வரவழைத்து புறநகர் பகுதிகளில் பேருந்துக்கு பதிலாக பயன்படுத்தவும் செய்தது.
ஆனால் வாகனங்களை பெற்றுக் கொண்ட பின்னர் வடகொரியா செலுத்த வேண்டிய 555 மில்லியன் பவுண்ட் தொகையை ஸ்வீடன் நாட்டுக்கு வழங்காமல் கால தாமதப்படுத்தி வந்துள்ளது. குறித்த தொகையை வடகொரியா இதுவரை செலுத்தவில்லை என்றும், அந்த தொகைக்கான வட்டியுடன் சேர்த்து தற்போது 2.4 பில்லியன் பவுண்ட் என எட்டியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளின் கடுமையான பொருளாதார தடைகளால் தடுமாற்றம் கண்டிருக்கும் வடகொரியாவை, குறித்த சம்பவத்திற்கு பின்னர் ஆண்டுக்கு இருமுறை ஸ்வீடன் அரசு நினைவுப்படுத்தி வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. நான்கு கதவுகள் கொண்ட வால்வோ 144 மொடல் கார்களை குறித்த நிறுவனம் 1966 முதல் 1974 வரை உருவாக்கி வந்துள்ளது மட்டுமின்றி குறுகிய காலத்தில் 10 லட்சம் கார்களை விற்பனை செய்து சாதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
1000 கார்களை திருடிய வடகொரியா: 50 ஆண்டுகளாக ஏமாற்றியது அம்பலம்
Reviewed by Author
on
October 25, 2017
Rating:

No comments:
Post a Comment