புலமைப்பரிசில் பரீட்சை! மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்த சாதனையாளர்களின் முழு விபரம் உள்ளே..
2017ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியது. இந்த நிலையில், தமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மாவட்ட ரீதியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களின் விபரம் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு
தினுக்க கிரிஷான் குமார என்ற மாணவர் 198 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.இவர் நீர்கொழும்பு, ஹரிசந்திர மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி அனந்திகா உதயகுமார் 194 புள்ளிகளை பெற்று மாகாண மட்டம் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.அதே பாடசாலையை சேர்ந்த மைத்திரி அனுருத்திரன் 193 புள்ளிகளை பெற்று யாழ்.மாவட்டத்தில் இரண்டாம் இடத்தனை பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் அருட்சகோதரிமேரி றொஷாந்தி தெரிவித்தார்.யாழ்ப்பாண மாவட்ட வெட்டுப்புள்ளி 155ஆக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2017ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 216 மாணவர்கள் தேற்றியதாகவும் அவர்களில் 120 பேர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றினை பெற்று சித்தியடைந்துள்ளார்.
வவுனியா
வவுனியா மாவட்டத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தை சேர்ந்த இருவர் முதலாமிடம் பெற்றுள்ளனர்.உதயராசா அவிர்சாஜினி மற்றும் ஜெயக்குமார் லெவீந் ஆகிய இருவருமே 190 புள்ளிகளை பெற்று முதலாமிடம் பெற்றுள்ளன. இதேவேளை, புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்தை சேர்ந்த வி. ரவிசாந் 186 புள்ளிகளை பெற்று மூன்றாமிடத்தினை பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் மாணவி டிலக்சிக்கா வனராஜன் 191 புள்ளிகளையும், ஓட்டமாவடி சரீபலி வித்தியாலயத்தின் நையீம் முகமட் சஜில் என்ற மாணவனும் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையிலிருந்து 56 மாணவிகள் இவ்வருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளதாக அதிபர் இராஜகுமாரி கனகசிங்கம் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா
நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா நல்லதண்ணிர் ஆரம்ப வித்தியாலய மாணவி சமூவேல் செல்வா, தயாவதி தம்பதிகளின் செல்வ புதல்வி ஹொஸ்னீ என்ஸலேக்கா 191 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.2017 ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் கூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த இவர் நல்லதண்ணி மறே தோட்டம் வலதள பகுதியை சேர்ந்தவராவார்.
இதேவேளை, கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவனான அருள்ஞானம் நிதர்ஷன் 183 புள்ளிகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.
அதேபோல், அக்கரப்பத்தனை ஹோல்புறுக் ஆரம்ப பாடசாலை மாணவன் சிவஞானம் சுரேன் 183 புள்ளிகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.
முல்லைத்தீவு
முல்லைத்தீவு மாவட்டத்தில், வெவ்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மூவர் மாவட்ட ரீதியில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுள்ளனர்.அந்த வகையில், 188 புள்ளிகளை பெற்று மு/புதுக்குடியிருப்பு சிறி சுப்பிரமணிய வித்தியாலய மாணவி மகேந்திரன் கர்சனா முதலாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார். அந்த பாடசாலையில் 51 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். மாவட்ட ரீதியில் 187 புள்ளிகளை பெற்று மு/விசுவமடு விஸ்வநாதர் ஆரம்ப பாடசாலை மாணவி வி.அன்பருவி இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளதோடு குறித்த பாடசாலையில் 40மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
மாவட்ட ரீதியில் 186 புள்ளிகளை பெற்று மு/நெத்தலியாறு தமிழ் வித்தியாலய மாணவி யெகதீபன் நிலவரசி மூன்றாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளதோடு அந்த பாடசாலையில் 5 மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர்.
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் குபேரகுமார் நயோலன் அபிசேக் 191 புள்ளிகளைப்பெற்று மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
மன்.கட்டையடம்பன் றோ.க.த.க பாடசாலை மாணவன்ஞான சேகர் மெல்கிதன் 187 புள்ளிகளைப்பெற்று மாவட்டரீதியில் 2ம் இடம் பெற்றுள்ளார்.
அம்பாறை
191 புள்ளிகளைப்பெற்ற சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய மாணவி எம்.ஜே. அம்ரா முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.சம்மாந்துறை வலயத்தின் பின்தங்கிய புதுநகர் தமிழ் வித்தியாலய மாணவன் சுதர்சன் ஜிவானுஜா 187 புள்ளிகளைப்பெற்று 2ஆம் நிலையிலுள்ளார். இவர்கள் கல்முனை பற்றிமா தேசிய கல்லூரியைச் சேர்ந்தவர்களாவர்.186 புள்ளிகளைப்பெற்ற விமலராஜ் ஜெஸ்னு, தவராஜா துர்க்ஸாந்த் ஆகியோரே மாவட்டத்தின் மூன்றாம் நிலையிலுள்ள மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாய்ந்தமருது
சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய மாணவி எம்.ஜே.அம்ரா 191 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார் காரைதீவு கல்முனை வலயத்திலுள்ள காரைதீவுக் கோட்டத்தில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 37 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். காரைதீவு இ.கி.சங்க பெண்கள் பாடசாலையில் 14பேரும், காரைதீவு இ.கி.சங்க ஆண்கள் பாடசாலையில் 10பேரும், காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் 5பேரும், மாவடிப்பள்ளி அல்அஸ்ரப் மகா வித்தியாலயத்தில் 5பேரும், காரைதீவு விஸ்ணு வித்தியாலயத்தில் 2பேரும், காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலயத்தில் ஒருவருமாக மொத்தம் 37பேர் சித்திபெற்றுள்ளனர். சண்முகா மகாவித்தியாலயத்தின் வரலாற்றுச்சாதனையாக இம்முறை பெறுபேறு கருதப்படுகின்றது.
இதேவேளை கல்முனை வலயத்திலுள்ள கல்முனை முஸ்லிம் கோட்டத்தில் இம்முறை 130 மாணவர் சித்திபெற்றுள்ளனர்.எமக்கு நேற்று முதல் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இங்கு பெயர் குறிப்பிடப்படாத மாணவர்களின் விபரங்கள் இருந்தால் எமக்கு அனுப்பி வைக்கவும்.
புலமைப்பரிசில் பரீட்சை! மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்த சாதனையாளர்களின் முழு விபரம் உள்ளே..
Reviewed by Author
on
October 06, 2017
Rating:

No comments:
Post a Comment