புலமைப்பரிசில் பரீட்சை! தமிழ் மொழியில் முதல் மூன்று நிலைகளில் உள்ள மாணவர்களின் விபரம் -
அம்பாறை மாவட்டத்தில், தமிழ் மொழி மூலம் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்த மாணவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. 191 புள்ளிகளைப்பெற்ற சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய மாணவி எம்.ஜே. அம்ரா முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கல்முனைக்குடியைச் சேர்ந்த இவர் பாடசாலைப்படிப்பைத்தவிர எந்தவொரு பிரத்தியேக வகுப்பிற்கும் செல்லாதவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை வலயத்தின் பின்தங்கிய புதுநகர் தமிழ் வித்தியாலய மாணவன் சுதர்சன் ஜிவானுஜா 187 புள்ளிகளைப்பெற்று 2ஆம் நிலையிலுள்ளார்.
இதேவேளை, 3ஆம் நிலையில் 2 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர். இவர்கள் கல்முனை பற்றிமா தேசிய கல்லூரியைச் சேர்ந்தவர்களாவர். 186 புள்ளிகளைப்பெற்ற விமலராஜ் ஜெஸ்னு, தவராஜா துர்க்ஸாந்த் ஆகியோரே மாவட்டத்தின் மூன்றாம் நிலையிலுள்ள மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புலமைப்பரிசில் பரீட்சை! தமிழ் மொழியில் முதல் மூன்று நிலைகளில் உள்ள மாணவர்களின் விபரம் -
Reviewed by Author
on
October 06, 2017
Rating:

No comments:
Post a Comment