சர்வதேச பட்டினிக்கான குறியீடு! 84வது இடத்தில் இலங்கை
சர்வதேச பட்டினிக்கான குறியீட்டில் இலங்கை 84வது நாடாக தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப்பட்டியலின்படி இலங்கை, 25.5 புள்ளிகளை கொண்டுள்ளது.
வொஷிங்டனை தளமாகக்கொண்ட சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவகம் இது தொடர்பானஅறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 100வது இடத்திலும், பாகிஸ்தான் 106வது இடத்திலும், பங்களாதேஷ் 88 வது இடத்திலும், நேபாளம்72 வது இடத்திலும் உள்ளன.
இந்த குறியீடு போசாக்கின்மை, சிறுவர் பராமரிப்பு, சிறுவர் இறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்படுகின்றது.
சர்வதேச பட்டினிக்கான குறியீடு! 84வது இடத்தில் இலங்கை
Reviewed by Author
on
October 14, 2017
Rating:

No comments:
Post a Comment