வடகொரிய விவகாரத்தில் தலையிட வேண்டாம்: அமெரிக்காவை எச்சரித்த புடின்
வடகொரியா தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடியானது ஏற்றுக்கொள்ள முடியாதது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறித்த விவகாரம் தொடர்பில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் Sergey Lavrov தெரிவிக்கையில், கொரிய தீபகற்பத்தில் உருவகியுள்ள போர் சூழலை தணிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் ராஜாங்க பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்காமல், போர் பிரகடனம் நடத்துவது ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அமெரிக்காவின் இத்தகைய செயல் கண்டனத்துக்கு உரியது என்றார். மட்டுமின்றி அமெரிக்க வெளிவிவகார செயலருடன் மேற்கொண்ட உரையாடலில் சிரியா, உக்ரைன் மற்றும் வடகொரியா தொடர்பில் விவாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவுக்கு எதிராக போருக்கு தயார் என அமெரிக்க ராணுவ தளபதிகள் அரசுக்கு அறிவித்துள்ள நிலையில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சரின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
இதனிடையே அமெரிக்க ராணுவ தளபதிகளில் ஒருவரான ஜேம்ஸ் மாட்டிஸ், வடகொரிய விவகாரம் தொடர்பில் நாளை என்ன நடக்கும் என்பதை தற்போது முன்னெச்சரிக்கை செய்ய முடியாது, ஆனால் அமெரிக்க ராணுவம் வடகொரிய தலைமைக்கு எதிராக போர் தொடுக்க தயார் நிலையில் உள்ளது என்றார். இருப்பினும் டிரம்ப் அரசாங்கம் வடகொரியாவுடன் ராஜாங்க அளவில் பிரச்சனைக்கு தீர்வை எட்டவே முயன்று வருவதாகவும், ஆனால் வடகொரியாவுக்கு எதிராக இதுவரை மேற்கொண்ட பொருளாதார தடைகள் எதுவும் எவ்வித பலனையும் தரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனாலையே நீ அல்லது நான் என்ற முடிவுக்கு அமெரிக்க அரசும் ராணுவமும் எட்டியுள்ளதாக தளபதி மாட்டிஸ் தெரிவித்துள்ளார்.
வடகொரிய விவகாரத்தில் தலையிட வேண்டாம்: அமெரிக்காவை எச்சரித்த புடின்
Reviewed by Author
on
October 10, 2017
Rating:
Reviewed by Author
on
October 10, 2017
Rating:


No comments:
Post a Comment