அண்மைய செய்திகள்

recent
-

மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா மாவட்ட மின்சாரம் இன்று 08-5-30 தடைப்பட்டிருக்கும்.....


மன்னார், யாழ்ப்பாணம்,  வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக இன்று(10) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் கூறியுள்ளார்.

இதன்படி, இன்று காலை 08 மணி முதல் மாலை 05.30 மணி வரை குறித்த பகுதிகளில் மின்தடைப்பட்டிருக்கும் எனவும் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் அறிவித்துள்ளார்.

 யாழ். மாவட்டத்தில்.. கொல்லங்கலட்டி, வித்தகபுரம், மாவை கலட்டி, கீரிமலை, கீரிமலைச் சந்தி கடற்படை முகாம், கூவில், நல்லிணக்கப்புரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.

மன்னார் மாவட்டத்தில்.. பறயனாலங்குளத்திலிருந்து தலைமன்னார் வரை, வங்காலை கடற்படை முகாம், வங்காலை நீர்ப்பாசனத் திணைக்களம், அடம்பன் நீர்ப்பாசன சபை, கமலாம்பிகை அரிசி ஆலை, மாந்தை உப்பு உற்பத்தி நிலையம், மன்னார் C.T.B, கீரி ஐஸ் தொழிற்சாலை, மன்னார் வைத்தியசாலை, மன்னார் நீர்ப்பாசனத் திணைக்களம், மன்னார் தொலைத் தொடர்பு நிலையம், ஆவேமரியா ஐஸ் தொழிற்சாலை,ரைமெக்ஸ் கார்மென்ட், விசேட அதிரடிப்படை முகாம், எருக்கலம் பிட்டி பம் கவுஸ்,

பேசாலை Palamayarah House, வங்காலைப்பாடு ஐஸ் தொழிற்சாலை, பேசாலை ஐஸ் தொழிற்சாலை, அந்தோனிப்பிள்ளை ஐஸ் தொழிற்சாலை, கூல்மேன் ஐஸ் தொழிற்சாலை, மீன்பிடி சமாசம், தலைமன்னார் வைத்தியசாலை, தலைமன்னார் கடற்படை முகாம், சீனத் துறைமுகம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டிருக்கும்.

வவுனியா மாவட்டத்தில்..  நெளுக்குளத்திலிருந்து பம்பைமடு வரை, முகத்தான்குளம், கிறிஸ்தவ குளம், கதிர்காமாநகர், அருவித் தோட்டம், ஆண்டியபுளியங்குளம், பீடியா பாம், மெனிக் பாம் வலயம் 02, வலயம் 03, வலயம் 04, சக்திகம, மல்வத்தோயா, வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி , பம்பைமடு பல்கலைக்ககழகம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.

மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா மாவட்ட மின்சாரம் இன்று 08-5-30 தடைப்பட்டிருக்கும்..... Reviewed by Author on October 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.