அண்மைய செய்திகள்

recent
-

உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் - துபாயில் செயல்பாட்டுக்கு வந்தது


போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது.


போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது.

‘எஸ்.பி.எஸ்.’ என பெயர் சுருக்கம் கொண்ட இந்த ஸ்மார்ட் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தல், போக்குவரத்து அபராதம் செலுத்துதல், விபத்து குறித்து பதிவு செய்தல், தேவையான ஆவணங்கள் பெறுதல் உள்ளிட்ட 60 சேவைகளை பொதுமக்கள் பெற முடியும்.

இந்த ஸ்மார்ட் போலீஸ் நிலையத்தில் காத்திருப்பு பகுதி, கண்காட்சி பகுதி, சேவை பகுதி என 3 முக்கிய பிரிவுகள் உள்ளன. இங்கு வரும் மக்கள், ஸ்மார்ட் போலீஸ் நிலையத்தின் முகப்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் எந்திரத்தில், தாங்கள் எந்த சேவையை பெற வந்திருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தி, அதற்கான டோக்கனை பெற்றுக்கொண்டு, காத்திருப்பு அறையில் காத்திருக்க வேண்டும்.

பின்னர் அவர்கள் காணொலிக்காட்சி மூலம் போலீஸ் அதிகாரியை தொடர்பு கொண்டு தங்களுடைய புகாரை பதிவு செய்யலாம். காணொலிக்காட்சி மூலம் 24 மணி நேரமும் போலீஸ் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

ஸ்மார்ட் போலீஸ் நிலையத்துக்கு வரும் மக்களின் உதவிக்காக தற்போது அங்கு 2 போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த சேவையை மக்கள் முழுமையாக பயன்படுத்த தெரிந்துகொண்ட பின் போலீசார் இருவரும் அங்கிருந்து திரும்பப்பெறப்படுவார்கள்.

உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் - துபாயில் செயல்பாட்டுக்கு வந்தது Reviewed by Author on October 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.