செவ்வாய் கிரகவாசிகளுக்கு பூமியோடு தொடர்பு உண்டு: திடுக்கிடும் தகவலை வெளியிட்டது நாசா -
பூமிக்கிரகவாசிகளுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்ற அதிர்ச்சி தரும் செய்தியினை நாசா தெரிவித்துள்ளது.செவ்வாய்க்கிரகம் தொடர்பில் நீண்டநாள் ஆய்வில் ஈடுபட்டுள்ள நாசா விண்வெளி ஆய்வு மையமானது, நேற்றைய தினம் செவ்வாய்க்கிரகம் மற்றும் பூமியில் மனித இனத்தின் தோற்றம் என்பது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டது.
குறித்த அறிக்கையின் மூலமாகவே நாசா இந்தத் தகவலினைத் தெரிவித்துள்ளது. மேலும், செவ்வாயிலேயே மனித இனம் தோன்றியிருக்கலாம் எனவும், அக்கிரகத்தில் மனிதர்கள் வாழ்ந்து இருக்கலாம், அதற்கு ஏதுவான சூழ்நிலைகள் செவ்வாயில் காணப்படுகின்றது எனவும் நாசா குறிப்பிட்டுள்ளது.
செவ்வாயில் கிடைக்கப்பெற்ற படிமங்களின் அடிப்படையிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள நாசா, செவ்வாயில் வாழ்ந்த உயிரினங்கள் மோசமான வானியல் மாற்றங்களால் அழிந்திருக்க முடியும் எனவும் கூறியுள்ளது. மேலும், குறித்த அறிக்கையின் மூலமாக மனித இனத்தின் தோற்றம் தொடர்பிலும் செவ்வாய் கிரகம் தொடர்பிலும் முக்கியமாக கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடியும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளதோடு, இது வேற்றுக் கிரகம் தொடர்பில் முக்கிய திருப்பு முனை எனவும் தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிரகவாசிகளுக்கு பூமியோடு தொடர்பு உண்டு: திடுக்கிடும் தகவலை வெளியிட்டது நாசா -
Reviewed by Author
on
October 09, 2017
Rating:
Reviewed by Author
on
October 09, 2017
Rating:


No comments:
Post a Comment