தங்கம் உருவானது எப்படி? வெளியான ரகசியம்
விண்வெளியில் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பிரம்மாண்ட மோதல் ஒன்று தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்கள் எப்படி உருவாயின என்ற ரகசியத்தைப் போட்டு உடைத்துள்ளது. நீண்ட தொலைவில் நடந்த இந்த பெரும் மோதலின் அதிர்வு இப்போதுதான் பூமியை வந்து அடைந்துள்ளது.
இதுபோன்ற இணைப்பின் மூலமாகத்தான், பேரண்டத்தில் உள்ள தங்கமும், பிளாட்டினமும் இதற்கு முன்பு உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
ஆயிரம் பில்லியன் பில்லியன் கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரத்தில் ஹைட்ரா என்ற நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள என்.ஜி.சி. 4993 என்ற நட்சத்திர மண்டலத்தில் இந்த வெடிப்பு நடந்துள்ளது.இந்த வெடிப்பு, 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது டைனோசர்கள் பூமியில் இருந்த காலத்தில் நடந்தது.
அதன் ஒளியும், ஈர்ப்பு அலைகளும் இப்போது தான் நம்மை வந்து அடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இவ்வாறான பெரிய அளவிலாக ஆற்றலின் வெளியேற்றமே, தங்கம், பிளாட்டினம் உள்ளிட்ட அரியவகை உலோகங்களின் உருவாக்கத்திற்கு காரணம் என ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
நியூட்ரான் நட்சத்திரங்கள் இணையும்போது வெளியாகும் மீதங்களின் பில்லியன் டிகிரி வெப்பத்தில் உருவான சாம்பலே இன்றைய நகைகளில் உள்ள தங்கம், பிளாட்டினம் போன்ற கனமான தனிமங்கள் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.
தங்கம் உருவானது எப்படி? வெளியான ரகசியம்
Reviewed by Author
on
October 25, 2017
Rating:

No comments:
Post a Comment