யாழ். குடாநாட்டில் குடும்பமே தற்கொலை! சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு -
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட தாய் மற்றும் 3 பிள்ளைகளின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
28 வயதான தாயாரும் ஒன்று, இரண்டு மற்றும் நான்கு வயதான பிள்ளைகளின் சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த 4 பேரும் ஐஸ்கிரிமில் விஷம் கலந்து பருகிய நிலையில் உயிரிழந்தனர். இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். குடாநாட்டில் குடும்பமே தற்கொலை! சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு -
Reviewed by Author
on
October 29, 2017
Rating:

No comments:
Post a Comment