32 வருடங்களின் பின் கொழும்பை வந்தடைந்த பிரமாண்டம்! இலங்கைக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்
உலகில் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றாக கருதப்படுகின்ற USS நிமிடஸ் என்ற அமெரிக்க விமான போக்குவரத்து கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
USS நிமிடஸ் என்ற கப்பலுடன், USS பிரின்ஸ்டன், USS ஹொவாட், USS ஷவூப், USS பிரின்க்னே மற்றும் USS கிட்ஸ் ஆகிய போர்க்கப்பல்களே இலங்கையை வந்தடைந்துள்ளன.
1985 ஆம் ஆண்டின் பின்னர் அமெரிக்காவின் விமான போக்குவரத்துக் கப்பல், இலங்கைக்கு வருகை தந்துள்ளமை இதுவே முதற்தடவையாகும்.
23 மாடிகளை கொண்ட நிமிட்ஸ் கப்பல், 333 மீட்டர் நீளமுடையதாகும். 5,000 பேர் தங்குவதற்கான வசதிகளை இந்தக் கப்பலில் உள்ளன.
இந்த கப்பலிலுள்ள சமையல் அறையில் தினமும் 18,000 பேருக்கான உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.
மற்றும் சேவைகளை இலங்கையில் கொள்வனவு செய்யப்படவுள்ளன.அமெரிக்க கடற்படையினர் இலங்கைக்கு வருகை தந்ததன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க போர்க்கப்பல்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
32 வருடங்களின் பின் கொழும்பை வந்தடைந்த பிரமாண்டம்! இலங்கைக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்
Reviewed by Author
on
October 29, 2017
Rating:

No comments:
Post a Comment