மன்.சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆரம்ப பாடசாலையினை திறந்துவைப்பு
மன்னார் வலயக்கல்விப்பணிமனைக்குற்பட்ட புதிதாக அமைக்கப்பட்ட மன்.சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரியில் ஆராம்ப பாடசாலையினை வடமாகாண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன் இன்று புதன் கிழமை 25-10-2017 மதியம் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி S.சுகந்தி செபஸ்ரியன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வின் போது வடமாகாண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன் கலந்து கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் யூ.என்.கெபிட்டா நிறுவனத்தின் அமுலாக்கத்துடன் குறித்த ஆரம்ப பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதன் போது யூ.என்.கெபிட்டா நிறுவனத்தின் பிரதி நிதிகள்,பாடசாலை T.தனேஸ்வரன் அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மன்.சித்திவிநாயகர் தேசிய இந்துக்கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட ஆரம்ப பாடசாலையினை திறந்துவைப்பு
Reviewed by Author
on
October 25, 2017
Rating:

No comments:
Post a Comment