வவுனியா பூவரசங்குளத்தில் யானைத் தந்தங்கள் மீட்பு: இருவர் கைது-Photos
வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் மூன்று யானை தந்தங்கள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், அதனை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (30.10.2017) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பூவரசங்குளம், குருக்களூர் புதுக்குளம் பகுதியில் வைத்து விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட அதிரடிப்படையினர் 3 அடி தொடக்கம் 5 அடி வரையிலான 25 கிலோகிராம் எடையுடைய மூன்று யானை தந்தங்களை மீட்டுள்ளதுடன், அதனை வைத்திருந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களும், கைது செய்யப்பட்ட நபர்களும் இரவு வவுனியா பொலிஸாரிடம் விசேட அதிரைப்படையினரால் ஒப்படைத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா பூவரசங்குளத்தில் யானைத் தந்தங்கள் மீட்பு: இருவர் கைது-Photos
Reviewed by NEWMANNAR
on
October 31, 2017
Rating:

No comments:
Post a Comment