இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ கிணறு!
கேகாலையில் பல்வேறு நுட்பங்கள் அடங்கிய கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெரிவிக்கப்படுகிறது. கேகாலை- ரம்புக்கன வீதியின் பத்தமுரே நவகமுவ பழைய தேவாலயத்திற்கு அருகில் இந்த கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சுமார் 5 அடி கொண்ட இந்த கிணற்றின் மீது பெரிய அளவிலான கருங்கல் வைத்து குப்பை சேராத வகையில் ஒரு அடி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரியளவிலான மண் சட்டிகள் சில கிணற்றுக்குள் இறக்கி அதில் நீரின் தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
நவகமுவவில் உள்ள ஆதிகாலத்து தேவாலயத்திற்கு வரும் பக்தர்கள் பயன்படுத்துவதற்காக இந்த கிணறு பயன்படுத்தியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ கிணறு!
Reviewed by Author
on
November 01, 2017
Rating:

No comments:
Post a Comment