வடக்கிலிருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்ளுமாறு அரசிடம் கோரிக்கை
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை துரிதப்படுத்துவதுடன், வடக்கிலிருந்து இராணுவத்தினரை விலக்கிக் கொள்ளுமாறும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் உலகத்தமிழர்களுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் போல் ஸ்கெலி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அத்துடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் வடக்கில் இருந்து இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்படுதல் தொடர்பான அறிக்கையொன்று எதிர்வரும் 2018ஆம் ஆண்டின் மார்ச் மாத மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த செப்டம்பரில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வின் போது இலங்கையானது ஜெனீவா பிரேரணைகளை நிறைவேற்ற தாமதித்தால் அது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புக்கவுன்சிலில் முறையிடப் போவதாக அச்சுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே குறித்த போல் ஸ்கெலி ஒரு விடுதலைப் புலி ஆதரவாளர் என்று சிங்கள ஊடகம் ஒன்று விமர்சித்துள்ளது.
வடக்கிலிருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்ளுமாறு அரசிடம் கோரிக்கை
Reviewed by Author
on
October 29, 2017
Rating:

No comments:
Post a Comment