கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலைக்கு 7 விசேட விருதுகள்!
அரச நாடக ஆலோசனைக்குழு, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2017ஆம் ஆண்டுக்கான அரச சிறுவர் நாடக விழாவில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் இருந்து தேசிய மட்டத்திற்கு தெரிவான பட்டாம் பூச்சி எனும் நாடகமானது தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றதுடன், 7 விசேட விருதுகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், சாதனை படைத்தவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வானது இன்று சிசிலியா மேரி அரங்கில் கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் எஸ்.சந்தியாகு தலைமையில் நடைபெற்றது.
ஒரு சிறுமியின் உண்மைக்கதையினை வெளிப்படுத்தும் இந்நாடகமானது, விளையாட்டுடன் கூடிய கற்றல் செயற்பாட்டிலே தன்னை ஈடுபடச்செய்து தனது குடும்பத்துடனும், சகபாடிகளுடனும் மகிழ்ச்சியாக தனது பொழுதை போக்கி கற்றலில் ஒரு உன்னத இடத்தினை பெற்றுக்கொள்கின்றாள்.
இதனை புலப்படுத்தும் விதமாகவே இந்த பட்டம்பூச்சி நாடகம் அமைந்திருந்து.
இந்த நாடகத்திற்கு விசேடமாக ஏழு விருதுகள் கிடைக்கப்பெற்றது. அந்தவகையில் இவ்வருடத்திற்கான அரங்க நிர்மாணத்திற்கு மூன்று விருதுகளும், அரங்க முகாமைத்துவத்துவம், பாடல், நாடக எழுத்துரு, சிறந்த நடிகைகான விருதுகள் என ஏழு விசேட விருதுகளை பெற்றதுடன் இரண்டாமிடத்திற்கான விருதினையும் பெற்றுக்கொண்டுள்ளது.
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலைக்கு 7 விசேட விருதுகள்!
Reviewed by Author
on
October 27, 2017
Rating:

No comments:
Post a Comment