"நாட்டின் கடன் தொகை 10.2 திரில்லியன் ரூபா"
மக்கள் விடுதலை முன்னணி தலைவர் உண்மையான கடன் தொகை குறிப்பிடப்படவில்லை என்று கூறுகின்றார். ஆனால் நான் வரவு -– செலவுத் திட்டத்தில் மூன்றாண்டுக்குச் செலுத்த வேண்டிய கடன் தொகையைக் குறிப்பிட்டேன். நாட்டின் மொத்த கடந்த தொகை 10.2 திரில்லியன் ரூபாவாகும். இவ்வாறு தெரிவித்தார் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர.
நாடாளுமன்றில் நேற்று வரவு– – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் இறுதிநாள் விவாதம் நடைபெற்றது. அதில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது
தற்போது கூட்டு எதிர்கட்சியினர் வரலாற்றை மறந்துள்ளனர். மன்னிக்கவும், இவர்களை எதிர்க்கட்சி என்று கூறுவதை விட கூட்டு கும்பல் என்று கூறுவது சிறந்தது என்று நினைகின்றேன். முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் சபையில் உரையாற்றியிருந்தார். ஆனால் அவர் நிதி அமைச்சராக முன்வைத்த வரவு –செலவுத் திட்டங்களை மறந்துள்ளார்.
அவர் தனது வரவு – செலவுத்திட்டத்தில் அத்தியாவசிய பொருள்களின் விலைகளை அதிகரித்தார். மக்களுக்கான சலுகைகளை இல்லாமல் செய்தனர். வாகனங்களின் வரியை அதிகரித்தனர். ஆனால் தனது மகனுக்காக “ரேஸ்” கார் வரியை நீக்கினர். முழு நாட்டை சீரழித்த வரவு – செலவுத்திட்டத்தையே முன்வைத்தனர்.
நாம் அப்படியல்ல. நாட்டு மக்களுக்கு செவிகொடுக்கும் அரசாகும். அரசியல் ரீதியான மறுசீரமைப்புகளை முன்னெடுத்து வந்தாலும் பொருளாதார மறுசீரமைப்பும் அவசியமாகும். பதவிக்கு வந்த பிறகு கருத்துச் சுதந்திரம் வழங்கப்பட்டது. அடிப்படை வசதிகளை ஏற்படுத்தினோம். முன்னைய ஆட்சியின்போது பொருளாதார ரீதியில் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன.
இதனை நாம் சுமக்க வேண்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் உள்நாட்டு மாத்திரம் மையமாக வைத்து பொருளாதாரக் கொள்கை வகுக்கப்பட்டது. மறைமுக வரியை விடவும் நேரடி வரியை அதிகரிக்கத் திட்டமிட்டுள் ளோம். முதலீடுகளை அதிகமாக நாட்டுக்கு கொண்டு வரவுள்ளோம். பசுமை பொருளாதாரத்தைக் கொண்டு வரவுள்ளோம். மூலதனச் சந்தையை விரிவாக்க வுள்ளோம்.
போட்டிதன்மை அதிகரிப்பதன் ஊடாக பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். போட்டியிட நாம் தயாராக வேண்டும் என்றார்.
"நாட்டின் கடன் தொகை 10.2 திரில்லியன் ரூபா"
Reviewed by Author
on
November 17, 2017
Rating:

No comments:
Post a Comment